வெள்ளி, 4 மே, 2012

உலகத் திரைப்பட அறிமுகம்

புதிதாக இரண்டாம் திருமணம் செய்து கொள்வதற்காக சதி செய்து மனைவி மீது பழி போட்டு அவளை ஒழித்துக் கட்டத திட்டம் போடும் கணவனும் தத்தமது சொந்த தேவைகளுக்காக அவனோடு கூட்டுச் சேரும் ஊர்ப் பெரிய மனிதர்களும் ரொம்பவும் முன்னேறி விட்டதாகச் சொல்லிக்கொள்கின்ற ஈரான் நாட்டு கிராமப் புற வாழ்க்கையின் அவலத்தை நமக்கு காட்டிக் கொடுக்கின்றனர்.சொராயா கல்லாலேயே அடித்துக்  கொல்லபடுகின்ற கொடூரம் முகத்தில் அறைகிறது. புதைக்கக்கூட இல்லாமல் சொரயாவின் உடலை நாய் நரிகள் தின்ன விடுவது  அதை விடக் கொடுமை.மிக இயல்பான  நடிப்பும் திரைக்கதையும் நம்மை படத்தோடு இருத்தி வைக்கின்றன.அவசியம் பார்க்க வேண்டிய படம்.





ரஷ்யாவின் கம்யுனிசப்  புரட்சி காலத்தில் சைபீரியச் சிறையிலிருந்து தப்பிக்கின்ற ஏழு பேர்களில் உள்ளூர்க் காரர்கள் வழியிலேயே விடை பெற்றுக்கொள்ள பட்டினியையும் தாகத்தையும் தாக்குப்பிடித்து  மூன்று பேர் மட்டும் மூவாயிரம் கிலோ மீட்டர் தூரத்தைக்கு  நீண்டு கிடக்கின்ற பனிப்பிரதேசத்தையும் புழுதி பறக்கும் பாலைவனத்தையும் கால்நடையாகவே  கடந்து இந்தியா வந்து சேர்கிறார்கள்.உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் அமைந்த இந்தப்படத்தின் கதாபாத்திரங்களின் மன உறுதி நம்மை மலைக்க வைக்கிறது.ஏறக்குறைய இந்திய எல்லையை எட்டிப்பிடித்து விட்ட நிலையில் ஏற்படும் அந்தப் பெண்ணின் மரணம் நம்மை அதிர வைக்கிறது. ஒரு கவள உணவுக்கும் ஒரு வாய்த் தண்ணீருக்கும் ஏங்கும மனிதர்களின் உயிர்ப் போராட்டம் உலுக்கி எடுக்கிறது.இந்திய எல்லையில் அவர்கள் வரவேற்க்கப்படுவதைக் காட்சியாக்கிய விதம் இந்தியர்களுக்கு பெருமை சேர்க்கிறது.  பாலைவனக் காட்சிகளின் ஒளிப்பதிவு பிரமிப்பூட்டுகிறது. மங்கோலிய ,சீன,திபெத் மற்றும் இமயத்தின் லாண்ட்ஸ்கேப் காட்சிகள் கண்களைக் கவர்கின்றன.Collin Farrel,Ed Harris போன்ற பெரிய நட்சத்திரங்கள் படத்துக்கு கூடுதல் சிறப்புச் சேர்க்கிறார்கள் 
















சோமாலியா நாட்டில் கொடிய வறுமைச் சூழலில் பிறந்து ஆட்டு மந்தைக்கிடையில் வளர்ந்து பெண்ணினத்திற்கு எதிரான மூடப் பழக்க வழக்கங்களால் உடலாலும் மனதாலும் பாதிக்கப்பட்டு பெற்ற தாயின் உதவியோடு தப்பியோடி லண்டன் மாநகரில் தஞ்சம் புகுந்து பசியோடும் குளிரோடும் போராடி ஆறு ஆண்டுகள் ஒளிந்து மறைந்து வாழ்ந்து இறுதியில் இங்கிலாந்தின் டாப் 1 மாடலாகப் பரிணமித்த ஒரு கறுப்புச் சிறுமியின் உண்மைக் கதை இது. பிழைத்ததே ஆகவேண்டும் 


























என்ற வெறியோடு அந்தப்பெண் நடத்துகின்ற வாழ்க்கைப்போராட்டம்தான் படத்தின் சிறப்பு.   தற்செயலாகச்  சந்திக்கும் விற்பனையாளப் பெண்ணை விடாமல் துரத்தி தங்க இடம் பெற்று பிரிட்டன் பாஸ்போர்ட்டுக்காக ஓட்டல் பணியாளனோடு செட்டப் திருமணம் செய்து வெற்றி பெறுவதற்காக இப்படியெல்லாம் தன்னந்தனியாளாக அந்தப் பாமரப் பெண் செய்கின்ற சாகசங்கள் நமக்குள் சிலிர்ப்பை ஏற்படுத்துகின்றன.    முதல் பார்வையிலேயே அந்த சாதாரணப் பெண்ணிடம் மறைந்திருக்கின்ற சிறப்பைக் கண்டுகொள்ளும் வெள்ளைக்கார புகைப்பட  நிபுணரும் ஒரு புகைப்படைத்தை பார்த்தே அவளுடைய எதிகாலத்தைக் கணித்து விடுகின்ற மாடல் கோ ஆர்டிநேட்டரும் நல்ல பாத்திரப்  படைப்புகள்,  அந்த மாடல் கோ ஆர்டிஉலகத் உலகதோடு விட்டுவிடாமல் இறுதியில் ஐக்கிய நாடுகள் சபையில் தன நாட்டில் பெண்களுக்கு இழைக்கப் படுகின்ற கொடுமைகளை உலகத்துக்கு தெரியும் விதமாக எடுத்துச் சொல்லி அவற்றுக்குத் தீர்வும் காண்கிறாள் பாலைவனத்தில் மலர்ந்த அந்த காட்டுப்பூ.சிறந்த படம்.
உலகத் 

                                                                                                                              தொடரும் .....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக