செவ்வாய், 2 அக்டோபர், 2012

' வேதம் புதிது ' -ஒரு நினைவு கூர்வு










சில தினங்களுக்கு முன் தொலைக்காட்சியில் 'ஜெயா மூவீஸ் 'சேனலில் 'வேதம் புதிது' திரைப்படம் ஒளிபரப்பானது.இந்தப் படத்தின் மிக அழுத்தமான கதைக் கருவுக்காக படத்தைத் தொடர்ந்து பார்த்தேன்.தனது இனத்தாராலேயே கைவிடப்பட்ட ஒரு அந்தணச் சிறுவன் அருவாளே கைப்பொருளாகவும் ஆடு கோழிகளே சாப்பாடாகவும் கொண்டு வாழ்கின்ற ஒரு தேவர் ஜாதிக் குடும்பத்தில் வளர நேர்கின்ற கருத்தைக் கொண்டது இந்தப் படம்.

' வேதம் புதிது ' ஒரு கற்பனைக் கதை என்று என்னால் சொல்ல முடியாது. ஏனெனில் இது எங்கள் வீட்டிலேயே நடந்தது. படத்தைப் பார்த்தபோது எனது இளமைக் கால கிராமத்து நினைவுகள் நெஞ்சில் அலையடித்தன.

சமாளிக்க இயலாத வறுமைச் சூழலில் பிழைப்புக்காக ஊரைவிட்டுப் போக வேண்டிய நிலையில் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த தனது 14 வயது மகனைக் கூட்டிவந்து எங்கள் வீட்டில் விட்டு விட்டுப் போனார் ஒரு பிராமணப் பெரியவர்.அந்தப் பையன் சீனிவாச ராகவன் எங்களோடு விளையாடி எங்களோடு சாப்பிட்டு எங்களுடனேயே படித்து எங்களுடனேயே வளர்ந்தான்.

அவனுக்காக எங்கள் வீட்டில் தனிச் சமையல் செய்யப்பட்டது.ஆனாலும் ஒன்றாகவே உட்கார்ந்து சாப்பிடுவோம்.நாங்கள் நண்டும் மீனும் கோழியும் முழுங்கும் பொது சீனிவாசன் பக்கத்தில் அமர்ந்து இந்த வாசனையை யெல்லாம் சட்டை செய்யாமல் சாம்பாரும் ரசமும் அப்பளமும் பொரியலும் சாப்பிட்டுக் கொண்டிருப்பான்.

பள்ளி இறுதி வகுப்பு முடிந்ததும் யாரோ அவனுடைய உறவுக்காரர்கள் வந்து அவனைக் கூட்டிப் போனார்கள்.அது வரையிலும் அவன் எங்கள் வீட்டில் சுத்த பிராமணப் பையனாகவே வளர்க்கப்பட்டான்.

இது நடந்து ரொம்ப காலம் ஆகிவிட்டது.இப்போது சீனிவாச ராகவன் நன்றாகப் படித்து மறைமலை நகர்ப் பக்கத்தில் நல்ல வேளையில் இருக்கிறான். குடும்பமும் ஆகிவிட்டது.வெளியில் சாப்பிடச் சென்றால் இப்போதெல்லாம் சீனிவாசனுக்கு மிகவும் பிடித்தது சிக்கன்தானாம்.

எல்லாமே நாம் வைத்துக் கொள்வதுதானே...இல்லையா..?








'மண்பானைச் சமையல், மாவிலைத் தோரணம் 'படிக்க சொடுக்குக

http://thenpothikai.blogspot.in/2012/07/blog-post_06.html#more








' பிளாஸ்டிக் உலகம் ' படிக்க சொடுக்குக
http://thenpothikai.blogspot.in/2012/05/blog-post_3568.html

















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக